தொகுப்பாளினிகளில் கடந்த 10 வருடங்களை தாண்டி இப்போதும் கலக்கி வருபவர் டிடி. இவர் நிகழ்ச்சி என்றால் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

அடுத்து இவர் என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அண்மையில் இதுனால் வரையிலான தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

பேட்டியில் அவரிடம் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன்.

அவரை ஒருமுறை பேட்டி எடுக்க கஷ்டப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.

இதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.