ஒவ்வொரு பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களை கணக்கிட்டு ஒவ்வொரு தனியார் டிவி சேனல்களும் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி கொள்வதற்காக புது புது படங்களை ஒளிபரப்புவது வாடிக்கையான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தனியார் சேனல்கள் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ஜெயா டிவி மற்றும் கலைஞர் டிவி ஆகியவை முக்கியமான தமிழ் சேனல்கள்.

இந்த சேனல்கள் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் புது படங்களை மற்றும் பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலைக்கு வாங்கி ஒளிபரப்பு செய்வார்கள். அவ்வாறு செய்வதினால் அதிகமான மக்கள் தொலைக்காட்சிகளில் தாங்கள் விரும்பிய படங்களை பார்ப்பார்கள். அவ்வாறு பார்க்கும் பொழுது அந்த சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங் அதிகமாகும். அவ்வாறு டிஆர்பி ரேட்டிங் கூடுவதால் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும் போது அதிகமான தொகை விளம்பரதாரர் இடமிருந்து வசூலிக்கப்படும். இதனால் எந்த சேனல் டிஆர்பி அதிகமாக இருக்கிறது, விளம்பரதாரர்கள் போட்டிபோட்டு விளம்பரம் அந்த சேனலுக்கு கொடுப்பது வாடிக்கை.

தற்போது 2019 ஆம் ஆண்டின் வெளியான டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெற்று

1) விசுவாசம் – 18143000

2) சர்க்கார் – 16906600

3) சீமராஜா திரைப்படம் – 16766000

4) சண்டக்கோழி-2 – 13731000

5) காஞ்சனா3 – 10973000 இடம்பெற்றுள்ளது

2019 ஆம் ஆண்டின் அதிகமான இம்பிரஷன் பெற்றது விசுவாசம் முதலிடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து விஜயின் சர்க்கார் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.