தொலைக்காட்சி தொடர்களில் தான் வில்லியாக நடிக்க போவதில்லை என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடிகை வனிதாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா வில்லியை போல் தான் சித்தரிக்கப்பட்டார். எல்லோரையும் வம்புக்கு இழுத்து சண்டைபோட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங்கை உயர்த்தினார் அவர்.

எனவே வனிதா மீது தற்போது வில்லி இமேஜ் விழுந்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள நிறைய சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல் இயக்குனர்கள் துடிக்கின்றனர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் வனிதா, சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
மேலும் ஒரு சில சீரியல்களில் வனிதா வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை வனிதா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போதைய சூழலில் தொலைக்காட்சி தொடர்களில் தான் வில்லியாக நடிக்கப் போவதில்லை என சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வனிதா தெரிவித்துள்ளார். தான் ஏற்கனவே தயாரித்து வரும் படத்தை முடித்து வெளியிடுவதில் தான் தனது முழு கவனம் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிதாக படங்கள் தயாரிப்பதற்காக நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெப் சீரிஸ்களில் நடிக்க முயற்சித்து வருவதாகவும் வனிதா கூறியுள்ளார்.

அதேபோல் தனக்கு ரசிகர்கள் ஆர்மி வைத்திருப்பதினாலும், அவர்கள் போடும் டிவீட்டினாலும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என வனிதா கூறியுள்ளார். ஆர்மியினர் வெளியிடும் பகிர்வுகளால் தனக்கு ஒற்றை ரூபாய்க்கூட கிடைக்கப் போவதில்லை எனவும் வனிதா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்தபோது அவருக்கு ஆதரவாக பேசியது ஆர்மியினர் தான். தன் சொந்த குடும்பத்தினருடன் பகையில் உள்ள வனிதா, நிகழ்ச்சியில் இருந்து வெறியேறிய பின்னர் ரசிகர்களை தான் தனது புதிய உறவுகள் என குறிப்பிட்டு வருகிறார். ஆனால் ரசிகர்களால் பணப்பயம் எதுவும் இல்லை என வனிதா கூறியிருப்பது ஆர்மியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.