காப்பான்’ படத்துக்கு பிறகு சூர்யா நடித்து வரும் சூரரை போற்று பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த படத்தை ‘இறுதி சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

சூரரை போற்று படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று தள்ளி வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகிறது.

நம்ம வீட்டுப்பிள்ளை வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், இரும்புத்திரை இயக்குனர் மித்திரனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஹீரோ. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரும். இந்த போட்டியில் இருந்து விலகவே சூர்யாவின் படத்தை ஜனவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது.

பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யாவுக்கு சிவகார்த்திகேயனுடன் மோதுவதால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழு நம்புகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து அவர் படம் வெளிவர இருப்பதால் படத்திற்கான ஓபனிங் நன்றாக இருக்கும் என திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனால் சூர்யாவின் திரைப்படம் ஜனவரி மாதத்திற்க்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறது.

சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.