பிகில் படத்தை ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருக்கும் தனியார் டிவி சேனலை விஜய் ரசிகர்கள் சரமாரியாக விளாசியிருக்கின்றனர்.

விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸானது. அதற்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே படத்தின் ட்ரெயிலர் வெளியானது.

பிகில் ட்ரெயிலரை ட்ரோல் புராடெக்ட் பிகில் என மரண கலாய் கலாய் கலாய்த்தனர் நெட்டிசன்கள். குறிப்பாக வயதான விஜய் நாற்காலியில் அமர்ந்தபடி கைகளை உயர்த்தி பிகிலே என கத்தும் காட்சியை செமயாக கலாய்த்திருந்தனர் நெட்டிசன்ஸ்.

வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதியவர்கள் வரை பிகிலே… என கத்தி கிண்டல் செய்திருந்தனர். தற்போது படம் ரிலீஸாகி உலகம் முழுவதும் வசூலை குவித்திருக்கிறது.

இந்நிலையில் தனியார் டிவி சேனலான விஜய் டிவி பிகில் படத்தை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறது. அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடிகர்கள் இருவர் நடித்திருக்கின்றனர்.

 

ஒருவர் வயதான விஜய் போன்று சேரில் அமர்ந்திருக்க பின்னால் ஒருவர் கையில் பந்தை சுழலவிட்டு நிற்கிறார். இந்த காட்சிகளுக்கு பின்னணியில் பிகிலே… என ஒலிக்கிறது. ஃபேன்மேடு, மோஷன் போஸ்டர் என அதனை ட்ரென்ட் செய்துள்ளனர்.

இதனை பார்த்தத விஜய் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். முதலில் அதனை டெல்லிட் செய்யுங்கள், மரியாதையாய் டெலிட் செய்யுங்கள்.. நல்லா இருக்காது.. நீங்களே கிரியேட் செய்துவிட்டு ஃபேன்மேடு என ஏன் பொய் சொல்கிறீர்கள் என்ற கண்டமேனிக்கு திட்டியுள்ளனர்.

சில ரசிகர்கள் எல்லை மீறி கெட்ட வார்த்தைகளாலும் திட்டி தீர்த்துள்ளனர். ஏற்கனவே விஜய் ரசிகர்கள் 50 தங்களின தலைவருக்காக வன்முறையில் ஈடுபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.