பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.

சமீபத்தில், சிறந்த நடிகைக்கான விருதை ‘ராஷி’ படத்தில் நடித்த ஆலியாபட் வென்றார்.சமீபத்தில் பிலிம்பேர் விருது விழா நிகழ்ச்சி தொடர்பான ஒரு பேட்டியில் நடிகை ஆலியாபட் பேசுகையில், “கடந்த சில மாதங்களாக நான் கவலையாக உணர்கிறேன்.

ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இது மன அழுத்தம் இல்லை. இந்த கலவை கடந்த ஆறு மாதங்களாக வருவதும், போவதுமாக இருக்கிறது. ஏன் அழுகிறேன் என்றே தெரியவில்லை. ஆனால், அழுகிறேன்.

எனது நண்பர்களிடம் நான் இதை பற்றி பேசியுள்ளேன். அவர்கள் எனக்கு சில வார்த்தைகளை கூறுவது சற்று ஊக்கத்தை தருகிறது” என்று கூறி ரசிகர்களை ஷாக்ஆக்கியிருந்தார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடைகளில் நீருக்கடியில் இருந்த படி. தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.