விஜய் தொலைக்காட்சி சார்பில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு அதிக அளவில் பார்வையாளர்கள் உண்டாகினர் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியானது தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழியில் தற்போது வெளியாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா.

இவர் இலங்கை நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இவரும் ஒரு தமிழ் நாட்டை சேர்ந்த பெண்ணாக மாறிவிட்டார். இவருக்கு சில தமிழ் படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவர் தனது சொந்த நாடான இலங்கை நாட்டிற்கு சென்று உள்ளார்.அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.