தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது, இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, வினோத் தான் இயக்கவுள்ளார்.

இப்படம் குறித்து போனிகபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் வலிமை படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார்.

வினோத்தும் கடுமையாக உழைத்து வருகின்றார், அவருடைய குழுவினருடன், கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் இருக்கும்’ என போனிகபூர் கூறியுள்ளார்.

அஜித்தின் ஜோடி யார் என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது. நயன்தாரா, த்ரிஷா, தமன்னா போன்ற பெயா்கள் அடிபட்டாலும் நஸ்ரியா, ஜான்வி கபூா் பெயா்களும் அடிபடுகின்றன. கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஜான்வியைப் பொறுத்தவரை தற்போதைக்கு தமிழில் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து வருகிறார். நஸ்ரியா திருமணத்துக்குப் பிறகு தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவா் அஜித்தின் தீவிர ரசிகை என்பது பலருக்கு தெரியாது. அநேகமாக வலிமையில் அஜித்தின் ஜோடியாக நஸ்ரியா நடிப்பார் என்று தகவல் பரவுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பா் மாதம் தொடங்க உள்ளது.