தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித் தற்போது வலிமை படத்தில் கமிட் ஆகியுள்ளார் இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார் இந்த இயக்குனர் நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற ஹிட் படத்தை கொடுத்தவர்.

கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன் வெளிவந்த விசுவாசம் படத்திற்கு வந்த லாபத்தை விட நேர்கொண்டபார்வை படத்திருக்கும் வந்த லாபம் மிகவும் குறைவுதான் இந்தப்படம் வினோத்தின் சொந்த கதை அல்ல ஏற்கனவே அமிதாபச்சன் நடித்த ரீமேக் படம்.

ஆனால் இப்போது வலிமை படம் வினோத்தின் சொந்த கதை என்பதால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட படத்தின் காட்சிகள் அருமையாக இருக்கும் என்று வினோத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இசையமைப்பாளர் யுவனின் பாடல்கள் தியேட்டர்கள் அனைவரையும் மிரள வைக்கும் அளவிற்கு இருக்கும் என படக்குழு கூறி வருகிறார்கள்.

வலிமை படத்தின் மொத்த பட்ஜெட் 110 கோடி இந்த படத்தில் அதிகம் சண்டைக் காட்சிகளுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என படக்குழு அறிவித்துள்ளனர்