இந்தியாவில் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா சுடிதார் அணிந்த படி நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட இவர் அவ்வப்போது வெளியே வந்து சென்றதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும், சிறைசாலையில் வசதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறையில் சலுகைகள் பெறுவதற்காக சசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை தான் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

ஏற்கனவே சிறையில் சசிகலா சுடிதார் அணிந்த படி இருந்த புகைப்படங்கள் வெளியாகி சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் சசிகலா சுடிதார் அணிந்த படி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மட்டும்தான் சிறைச்சாலையில் விதிகளின்படி ஆடை வழங்கப்படும்.

ஊழல் வழக்கு மற்றும் ஓராண்டு, இரண்டாண்டு போன்ற கைதிகளுக்கு அவர்கள் விரும்பும் ஆடையை அணிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும், சசிகலா வருமான வரி செலுத்தக் கூடிய நபர் என்பதால், அவர் விரும்பும் ஆடையை அணிந்து கொள்ள சிறை விதிகளில் இடம் உள்ளது என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.