பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை காதலித்தார்.

கவினும் சாக்ஷியும் காதலிப்பதை அறிந்தும் கவினை பிடிக்கும் என கடலை போட்டுவந்தார் லாஸ்லியா. பின்னர் அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு சாக்ஷி வெளியேறிய பின்னர் கவினை காதலிப்பதாக கூறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என கூறினார். ஆனால் லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை.

பிக்பாஸ் வீட்டிலேயே லாஸ்லியாவிடம் கடுமையான கோபத்தை காண்பித்தார் அவரது தந்தை மரியநேசன். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் ஆன பிறகும் கூட இருவரும் காதல் குறித்து வாய்திறக்கவில்லை.

தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரே ஒரு முறை மை கேம் சேஞ்சர் என கவினை மறைமுகமாக குறிப்பிட்ட லாஸ்லியா, அதன்பிறகு எதுவும் பேசவில்லை. இதனிடையே லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கவினை காதலிப்பது போல் நடித்ததாக தகவல் பரவியது.

அதுகுறித்தும் எதுவும் பேசாமல் இருந்தார் லாஸ்லியா. இதனைதொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவினும் லாஸ்லியாவும் கலந்துகொண்டனர். அப்போது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த கவின், தனக்கு பல கடமைகள் இருப்பதாகவும் மற்றதை பற்றி யோசிக்க முடியாது என்றும் கூறினார்.

ஏற்கனவே அவர் கொழும்பு ஏர்போர்ட்டில் எடுத்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சென்னை வந்துள்ளார் லாஸ்லியா. இதனால் ஏதாவது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாரா அல்லது விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறாரா? அல்லது தனக்கு வேண்டியவர்களை சந்திக்க உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதேநேரத்தில் இம்முறையாவது கவினுடனான காதல் குறித்து லாஸ்லியா வாய் திறப்பாரா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ராஜா ராணி பார்ட் 2வில் கவினும் லாஸ்லியாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதால் அதுதொடர்பான அறிவிப்பு ஏதும் வருமோ என்றும் காத்திருக்கின்றனர் கவிலியா ஆர்மியினர்.