பல இடங்களில் கைதி படம் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.

பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி விருந்தாக கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸானது. விஜய் மாஸ் ஹீரோ, படத்தின் பட்ஜெட்டும் பெரிது என்பதால் தமிழகத்தின் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸானது பிகில்.

படக்குழு ஏதிர்பாரத்தப்படியே முதல் நாளில் வசூலை அள்ளியது. ஆனால் அதனை தொடர்ந்து பிகில் வசூல் குறையத் தொடங்கி தியேட்டர்களும் காற்று வாங்க தொடங்கியது.

இதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடித்தது. இதன்காரணமாக பல மாநிலங்களில் பிகில் படம் தூக்கப்பட்டு கைதி படம் திரையிடப்பட்டது.

அந்த வகையில் மற்ற மாநிலங்களில் கைதிக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டாலும் மிகக்குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டதால் பிகில் அளவுக்கு கைதி படத்தால் வசூலை பார்க்க முடியவில்லை.

ஆனாலும் ரிலீஸ்க்கு முன்னரே லாப கணக்கை தொடங்கிய கைதி தொடர்ந்து நல்ல வசூலைதான் குவித்து வருகின்றது. கைதி படம் கடந்த 10 நாட்களில் 60 கோடி ரூபாய் வசூலை குவித்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நவம்பர் மாதத்தின் மூன்று நாளில் அதிக வசூலை குவித்திருக்கிறது. பிகில் வசூல் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் பிகிலை பீட் செய்து கைதி படம் வசூலை அள்ளியது. அமெரிக்காவில் 90 தியேட்டர்களில் ரிலீஸான பிகிலை காட்டிலும் வெறும் 50 தியேட்டர்களில் ரிலீஸான கைதி படம் வசூலை குவித்தது. தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிகில் படம் ஏறுமுகத்தில் இருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.