திரையில் பார்க்கும் ரசிகர்களையும் தாண்டி உடன் நடிக்கும் நடிகர்களும் அஜித் புகழ் பாடுவதும் இயல்பான ஒன்று.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தாலும் அனைவரிடத்திலும் மரியாதை, எளிமை போன்ற இயல்புகளால் அனைவரையும் வசீகரித்து விடுகிறார் அஜித்குமார்.

அஜித்துடன் நடித்த பாதிப்பில் தன் செயல்பாடுகளில் எளிமையையும், மரியாதையையும் கொண்டுவந்துள்ளேன் என கூறிய பல நடிகர், நடிகைகள் கோலிவுட்டில் உண்டு.

ரசிகர்களோடு சேர்ந்து எத்தனையோ நடிகர்களும் அஜித்தின் திரைப்படங்களை முதல் நாள் பார்த்து சிலாகிப்பதும் வாடிக்கை. ஆனால், படம் நடிப்பதை தவிர வேறு எந்த விதத்திலும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதில்லை நடிகர் அஜித்.

திரைப்படம் தவிர்த்து ரசிகர்களுடன் இவர் கடைசியாக பேசியது தனக்கும் அரசியலுக்குமான தொடர்பு என்ற ஒரு அறிக்கை மூலம் தான்.அஜித்திடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தும் அவர் பேட்டி கொடுப்பதற்கு தயாராக இல்லை.

ஏன், பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறேன். என்று சின்னத்திரை பிரபலம் கோபிநாத்திடம் அஜித் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அஜித்திடம் அவர் ஏன் பேட்டி கொடுப்பதில்லை என்று நான் கேட்ட போது, அவர் கூறிய பதில் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அஜித் கூறியதாவது, ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. பேட்டி கொடுக்கும்போது ‘தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியாதா?’ என விமர்சித்தார்கள்.

அதன் பிறகு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன், ‘இவரு.. தமிழ் நடிகர்.. ஆனா, பெரிய இதாட்டம்.. இங்கிலிஷ்ல தான் பேசுவாரு!’ என்று விமர்சித்தார்கள்.

நான் எதார்த்தமாக பேசிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் இருந்தால் மீடியாக்கள் அதை கண்டுபிடித்து வேறு மாதிரி திரிக்கும் விதமாக செய்தி போட செய்தார்கள். அதனால் தான் அமைதியாக இருக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு பேட்டி கொடுப்பதையே தவிர்த்தேன். இப்போதும், ‘பேச கூட மாட்டேங்குறாரு, பேட்டி கொடுக்க மட்டேங்குறாரு என விமர்சிகிறார்கள்.என்று கோபிநாத்திடம் அஜித் கூறினாராம்.

இதன் மூலம் அஜித் பேட்டியே கொடுக்க மாட்டேன் என்கிறார் என்று கூறும் மீடியாக்கள் தான் அஜித் பேட்டி கொடுப்பதை தவிர்த்ததற்கு காரணம் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது.