பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய அதில் முக்கிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

செட்டில் இருந்த ரசிகர்கள் பலரும் போட்டியாளர்களுக்கு ஆரவாரம் செய்தனர். குறிப்பாக நடிகர் கவின் பேச ஆரம்பித்தபோது நீண்ட நேரம் கத்தி ஆரவாரம் செய்து அவருக்கு உள்ள ரசிகர்கள் அதிகம் என்பதை காட்டினர். ‘போதும்’ என கவின் செய்கைகளில் சொன்னலும் அவர்கள் கேட்பதாயில்லை.

இப்படி அவருக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸை பார்த்து லாஸ்லியா கண்கலங்கிவிட்டார்.