தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் கண்டிப்பாக ஆரோக்கியமான வருடம் தான். விஸ்வாசம், பேட்ட, பிகில் என மூன்று படங்கள் ரூ 100 கோடியை தமிழகத்தில் தாண்டியுள்ளது.

இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப் படங்களை கூறியுள்ளார்.

இதில் இவர் பிகில், விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா 3, கோமாளி ஆகிய படங்கள் அதிகம் வசூல் செய்த படங்களாக அவர் அறிவித்துள்ளார்.