நடிகர் விஜய் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் கமிட் ஆகியுள்ளார் இதனால் அடுத்த வருடம் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவரும் என ரசிகர்கள் நினைக்கின்றனர் ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படம் அடுத்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.

தளபதி 64 படத்திற்கு இன்னும் தலைப்பு கூட வைக்கவில்லை ஆனால் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தனர் அப்படியென்றால் படத்தின் வேலைகள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கு வழக்கம்போல் தளபதி படம் வெளியாகும் அதனால் அடுத்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்

லோகேஷ் கனகராஜ் எப்போதுமே குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை பார்ப்பவர் கைதி படத்தை வெறும் 40 கோடி செலவில் படத்தை தயாரித்து அதிகம் லாபத்தை எடுத்துள்ளனர் இதனால் தளபதி 64 பட்ஜெட் 70 கோடி முதல் 80 கோடி வரை இருக்கும் என படக்குழு கூறியுள்ளனர்

விஜய் படம் என்றாலே படத்தின் பட்ஜெட் 100 கோடி மேல் தான் இருக்கும் ஆனால் இதில் குறைவாக இருப்பதற்கு காரணம் சொந்த படமாக இருப்பதால் இவ்வளவு கம்மியா என்று சிலர் கூறி வருகிறார்கள்