பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் TRP ல் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து TRPயில் முன்னிலையில் இருந்து வந்த சீரியலில், இயக்குனர்கள் மாற்றம், நடிகர்- நடிகைகளுக்கு இடையேயான போட்டி பொறாமையால் கொஞ்சம் டல்லடித்தது.

இதுபற்றி தகவல்கள் வலம் வந்தாலும் யாரும் பெரிதாக வெளியில் பேசாமல் இருந்து வந்தனர்.

சமீபத்தில் விழா வழங்கும் மேடையில் Favourite Hero விருது செம்பருத்தி சீரியலின் நாயகனான கார்த்திக் ராஜ்க்கு வழங்கப்பட்டது.

இதன்போது பேசிய கார்த்திக் ராஜ், நான் 12ம் வகுப்பு பெயில் ஆனவன், குடும்ப சூழல் காரணமாக என்னால் கல்லூரிக்கு சென்று படிக்கமுடியவில்லை, படிப்பை விட எனக்கு மற்ற Extracurricular Activities ல் ஆர்வம் அதிகம்.

நான் அதிகம் பேச மாட்டேன், எங்கும் செல்லவும் மாட்டேன், இதற்கு நான் பெரிய ஆள் என்றெல்லாம் இல்லை.

மேடை ஏறுவதில் எனக்கு பிரச்சனைகள் இருக்கிறது, நிறைய பேருடன் கருத்து வேறுபாடும் இருக்கிறது, எதையும் முகத்துக்கு நேராக பேசும் ஆள் நான்.

இது பலருக்கு பிடிக்காததால் பிரச்சனையில் முடிகிறது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கார்த்திக் ராஜீக்கும், அந்த சீரியலில் நடிக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் பிரச்சனை இருப்பதாக தகவல்கள் கசிந்தது நினைவருக்கலாம், இதை மனதில்வைத்தே இவர் இப்படி பேசியுள்ளார் என தெரிகிறது.