விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு சீசன்களைக் காட்டிலும், சமீபத்தில் நிறைவடைந்த மூன்றாவது சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நான்காவது சீசனை விரைவில் துவங்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் பல விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே போட்டியில் கலந்துக் கொண்டார்கள். அந்த விதிமுறைகளை மீறினார்கள் அவர்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இழப்பீடு கொடுக்கும் வகையில் அக்ரிமெண்ட்டும் போடப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையே போட்டியாளர்களுக்கு விஜய் டிவி விதித்த விதிமுறைகளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன், தாங்கள் சொல்லும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும், என்பதும் ஒன்று. அதனபடி, போட்டியில் இருந்து வெளியேறிய வனிதா உள்ளிட்ட பலர் விஜய் டிவி கைகாட்டும் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார்கள். கவின், சாண்டி போன்றவர்களை வைத்து தனியாக சில நிகழ்ச்சிகளையும் விஜய் டிவி தயாரித்தது. இதுவும் அவர்களது அக்ரிமெண்டில் இடம்பெற்றிருந்தது தானாம்.

ஆனால், இவர்களைப் போல் சேரனிடம் மட்டும் விஜய் டிவி-யால் எதுவும் செய்ய முடியவில்லை. பலரை தனது அக்ரிமெண்ட் மூலம் ஆட்டிப்படைக்கும் விஜய் டிவியை சேரன் அடக்கிவிட்டார். ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் சேரன் எந்த ஊடகத்திற்கும் பேட்டிக் கொடுக்கவில்லை. விஜய் டிவி இது குறித்து சேரனிடம் பேசிய போது, ஒரே வார்த்தையில் நோ சொல்லிவிட்டாராம்.

சர்ச்சைகள் உருவாகும் ஒரு போட்டியில், பொதுமக்களிடம் தனது பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில், போட்டியில் விளையாடிவிட்டு வெளியேறியிருக்கிறேன். அப்படி இருக்க பேட்டிகளின் மூலம் எதாவது பேசி, தேவையில்லாத பிரச்சினையை எதற்கு உருவாக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும், அதனால் நான் யாருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுக்க மாட்டேன், என்று சொல்லிவிட்டாராம்.

சேரனின் மறுப்புக்கு பிறகு எதுவும் செய்ய முடியாமல் விஜய் டிவியும் ஆஃப் ஆகிவிட, சேரனோ தனது சக போட்டியாளர்களை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தித்து நலம் விசாரிக்க தொடங்கிவிட்டார்.