நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் தமிழ்நாட்டில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல நாட்கள் முன்பே 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் எந்தெந்த ஊரில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது பற்றிய விவரங்களை பிரபல பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர் தரன் ஆதர்ஷ் தன்னுடைய அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடு வாரியாக வசூலித்துள்ள தொகைகள் பற்றிய விபரம் இதோ.

அமெரிக்கா -7.21 கோடி
ஐரோப்பா – 4.14 கோடி
ஆஸ்திரேலியா – 2.30 கோடி
ஃப்ரான்ஸ் – 26,996 பார்வையாளர்கள்
மலேசியா – 6.76 கோடி
நியூசிலாந்து – 9.24 லட்சம்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது.

படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. இந்நிலையில், படம் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் பிகில் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமத்தை வாங்கிய “ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மென்ட்”-ன் உரிமையாளர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், பிகில் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு போதுமான லாபம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் வரும் வசூலை வைத்து தான் பிகில் லாபமா..? நஷ்டமா..? என்ற முடிவுக்கு வரமுடியும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரதினர்.