புதுச்சேரி காமராஜர் நகர் இடைத் தேர்தலின் முடிவை அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21ம் திகதி நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமாரும், என் ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சர்பில் பிரவீனா போட்டியிட்டார்.

மொத்தம் 24310 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் காமராஜர் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782 (60.81%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7612 (31.31%) வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,170 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றிப் பெற்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா 620 (2.55%) வாக்குகள் பெற்றார். நோட்டாவிற்கு 426 (1.75%) பேர் வாக்களித்துள்ளனர்.