திருச்சியில் உள்ள பிரபல நகைகடையான லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல கட்ட விசாரணைக்கு பிறகு இது தொடர்பான குற்றவாளிகளை பிடித்தனர். இதில் முக்கிய குற்றவாளியான முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன் நகைகடை முதலாளி திரூடியவனிடம் பேச வேண்டூம் என போலீஸிடம் அரை மணி நேரம் அனுமதி கேட்டு பின் பதினைந்து நிமிடம் காவல் துறை அதிகாரிகள் சம்மதித்தனர். முதலாளி பேசியது

எனக்கு நகை திருடு போனது பற்றி கவலை இல்லை. இன்சுரன்ஸ் செய்துள்ளேன் இதை விட அதிகமாக சம்பாதிக்கும் தைரியம் உள்ளது. இதை எப்படி செய்தீர்கள் கடையில்ஸவேலை பார்ப்பவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது. எனது கடையில் வேலை செய்பவன் திருடுகிறான் என்றால் வேலை செய்பவரின் தேவையை நான் பூர்த்தி செய்யவில்லை.

அவர்களின் பணத்தேவை பற்றி நான் தெரிந்து கொள்ளவில்லை. அதற்காக பல முயற்சிகள் எடுத்து உன்னிடம் பேசினேன் என்றார். முருகன் வேலை செய்பவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. நாங்கள் நகை வாங்குவது போல் பத்து முறை கடைக்கு வந்து பார்த்து திட்டமிட்டு பின் திருடினோம் . இது பல நாள் திட்டம் எனக் கூறியுள்ளான்.