தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, தளபதியுடன் மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் அவ்வப்போது ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தி அயர்ன் லேடி’யிலும் தற்போது நடித்து வருகிறார்.

நித்யா மேனன் இப்போது தான் மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

சமீபத்தில் நித்யா மேனன் பேட்டி ஒன்றில், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் கதையை எல்லாரும் படமாக எடுக்க நினைக்கிறாங்க. அதுல யார்? வெற்றி பெறுவார் என பொறுத்து இருந்து பார்க்கலாம்.

எந்த கதை மக்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை மக்கள் ரசிக்கட்டும் என்று சொல்லி முடித்த அவரிடம் நிறுவர் ஒருவர்?

கேள்வி? உங்கள் திருமணம் பற்றி சொல்லுங்கள் சற்று சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு,

பதில்! இப்போதைக்கு எனது வாழ்வில் திருமணத்தில் எந்த ஒரு நம்பிக்கையும் இதுவரை எட்ட பட வில்லை. இவர் தான் என் வாழ்க்கை துணை என நான் பார்த்த பல ஆண்கள் மேல் இதுவரை தோணவில்லை இனி வரும் காலத்தில் எனக்கு எப்போது தோணுதோ அப்ப கண்டிப்பாக உடனே கல்யாணம் செய்துகொள்வேன்.

ஆனால், இதுவரை அப்படி யாரையும் இதுவரை நான் பாக்கல. அதுமட்டுமில்லாமல் என் வீட்டிலும் இப்ப உடனடியாக கல்யாணம் பண்ணிக்கோன்னு இதுவரை எனது தாய்,தந்தை எந்த ஒரு கட்டாயமும் கொடுக்கவில்லை.

எனவே எனக்கு சரியான நேரம் வரும் போது அப்போது என் திருமணம் குறித்து உங்களுக்கு கண்டிப்பாக நானே கூறுவேன்.

அதே நேரத்துல நான் பல படங்களில் ‘லிவிங் டுகெதர், பெண், மற்றும் ஒரு பென்ணயே காதலிப்பது போன்ற லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்’ மாதிரியான சவாலான கதாபாத்திரங்களில் நான் ஏற்று நடிச்சிருக்கேன்.

ஆனால் அதுக்காக அதுவே என் வாழ்க்கையில் நினைப்பது ரொம்ப தப்பு. அந்த தப்பை நான் இப்போது அல்ல எப்போதும் ஒரு போதும் செய்யமாட்டேன் என கூறினார்.