எங்கள் அண்ணன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. இந்த திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின் இங்கிலீஷ்காரன் ,சாணக்கியா, நான் அவனில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர். மச்சான் என்ற ஒற்றை சொல்லோடு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அதன்பின் குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நமிதா. பொட்டு என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் உடல் பருமனுடன் நடித்து ராசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானார். இதனால் மனமுடைந்து போன நமீதா தனது உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.