முருகதாஸ் இன்று உச்சத்தில் இருக்கும் இயக்குனர். இவருடன் பணியாற்ற இந்தியாவில் பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் முருகதாஸ் தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்க, பிரபல வார இதழ் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில் பல தர்பார் சுவாரஸ்யங்களை கூறியுள்ளார், அதோடு அஜித்துடன் ஏன் இணையவில்லை என்ற வழக்கமான கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு அவர் தீனா முடிந்தே இரண்டு முறை இணைய முயற்சி செய்து முடியாமல் போனது, ஆனால், எப்போது வேண்டுமானாலும் எங்கள் கூட்டணி அமையலாம்.

அதே நேரத்தில் நான் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை கண்டு கண்டிப்பாக மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் என்றால் அஜித் சார் தான் என உருக்கமாக பேசியுள்ளார்.