தமிழ் சினிமாவில் எவர்கிரீன் கல்லூரி மாணவர் என்றால் அது முரளிதான். 1984-ம் ஆண்டு பூவிலங்கு படத்தில் அறிமுகமானதிலிருந்து, கடைசியாக அவர் தோன்றிய பாணா காத்தாடி வரை அவர் பெரும்பாலும் கல்லூரி மாணவராகத்தான் நடித்திருந்தார். ஆனால் அதில் மனதை நெகிழ்த்தும் விதமான நடிப்பைத் தந்தவர் முரளி.

முரளி கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

அவர் 2010 ஆம் ஆண்டில் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தலில் அதிமுகவை ஜெயிக்க வைக்க தீவிரமாக பிரசாரம் மேற்கொள்வேன் என குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் முரளி கூறி வந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதால் கக்டைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.