நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது மிகவும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஏற்கெனவே தமிழக அரசியலில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். இவை அனைத்தையும் பார்த்த பின்பும் சிலர் அரசியலுக்கு வர துடிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த மாதம் மட்டும் தமிழ் திரையுலகை சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் தமிழக பாஜக வில் இணைந்துள்ளனர்.அவர்களுள் ஒருவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆவார். இவர் இயக்குனர் பாலா இயக்கிய “தாரை தப்பட்டை” படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் பல தமிழ் திரைப்படங்களையும் தயாரித்து உள்ளார். மேலும் இவர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக வில் சேர்ந்துள்ளார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜக வில் இணைந்த சில நாட்களிலேயே பிரபல தமிழ் இசை அமைப்பாளர் தீனாவும், பாஜகவின் அலுவலகத்திற்கே சென்று, பொன்.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். இது குறித்து அவர் கூறிய போது, “பாஜகவில் சேருமாறு என்னை அழைத்தனர். மேலும் எனக்கு பாஜக ரொம்ப பிடிக்கும். அது இந்துக்களின் பாதுகாவலனாக உள்ளது. மேலும் எனக்கு பிடித்த கட்சியே என்னை அழைத்ததால், நல்ல நாளான விஜய தசமி அன்று பாஜாக வில் இணைத்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து நடிகர்கள் பாஜக வில் இணைந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.