தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவிற்கு நிறைய அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இன்று நல்ல நிலைமைக்கு வருவதற்கு காரணமாக இருந்தார். அவ்வாறு புதுமுக இயக்குனராக அந்த இருந்த ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு தீனா படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை வழங்கினார். அந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ஏ ஆர் முருகதாஸ் அற்புதமான தீனா என்ற படத்தை கொடுத்தார்.

இதன் மூலம் ரசிகர்களிடையே அஜித்தின் செல்வாக்கு அதிகரித்ததோடு அனைவரும் அஜித்தை தல என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு உருவானார். அதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் முருகதாஸ், அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் பின்னர் ரமணா, கத்தி, துப்பாக்கி, கஜினி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்தியாவின் முக்கிய டைரக்டர்கள் ஒருவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருப்புமுனையை ஏற்படுத்திய தீனா படத்திற்கு பிறகு இணைந்து பணியாற்றவில்லை.

முருகதாஸ் போகும் இடங்களில் தலையுடன் எப்பொழுது திரும்ப பணியாற்றியவர்கள் என்று கேள்வி கேட்பது வழக்கமாக நடந்து வருகிறது. அவர் எப்பொழுதும் போல் வெகுவிரைவில், தல அவர்கள் சிக்னல் கொடுத்தால் இது உடனே நடக்கும் என்று கூறிவருகிறார். ஆனால் அவர்களுக்குள் உண்மையில் நடந்தது என்ன, ஏன் மீண்டும் அவர்கள் இணையவில்லை. அதற்கு முக்கிய காரணம் முருகதாஸ் தான்.

தீனா படத்தை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் மிரட்டல் என்ற படத்தில் நடிக்க இருந்தார். அப்பொழுது அவருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற லட்சிய கனவை நோக்கி போய்க்கொண்டிருந்தார்.

மிரட்டல் படம் பூஜை போட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த சமயத்தில் ரேஸில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு வெளிநாடு பறந்து விட்டார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. அச்சமயத்தில் அஜீத் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. அஜித் மீது பெரிய விமர்சனங்கள் எழுந்தது. அப்பொழுதே ஏ ஆர் முருகதாஸ் அஜித்திடம் கேட்காமலே அப்படத்தின் கதையை சூர்யாவிடம் கூறி படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.

இதனால் அஜித் மற்றும் முருகதாசுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அஜித் அவர்களிடம் சொல்லிவிட்டு போய் இருந்தால், அஜித் ஆல் த பெஸ்ட் சொல்லி வழியனுப்பி வைத்திருப்பார். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து நடந்து கொண்டதால் அவர் மீது மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த மனக்கசப்பே அவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்றாமல் இருப்பதற்கு காரணம்.

இந்த உண்மை முருகதாசுக்கு தெரியும், ஆனால் அவரிடம் கேள்வி கேட்கும் பொழுது இதை அவர் காரணமாக அனைவரிடமும் சொல்ல முடியாத நிர்பந்தத்தில் இருப்பதால் விரைவில் மீண்டும் இணைவேன் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார். அந்த நம்பிக்கை உண்மையானால் தல ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மீண்டுமொரு நல்ல ஆக்சன் திரைப்படம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.