அசுரன் படம் பார்த்துவிட்டு, படக்குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டி உள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த நான்காம் தேதி வெளியான படம் அசுரன். சமீபத்தில், நூறு கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!

கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV