தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர் சில காலமாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்று தருகிறது இதனால் தயாரிப்பாளர்கள் பலர் தளபதி விஜயை வைத்து படம் தயாரிக்க ஆர்வமாக முன்வருகிறார்கள்.

விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவருக்கு ஒரு திருப்புமுனையான படம் எதுவென்றால் நண்பன் ,துப்பாக்கி தான் அந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் அனைத்து படங்களும் இன்று முதல் வசூலில் கலக்கி வருகிறது இவர் துப்பாக்கி படத்திற்கு முன் வாங்கிய சம்பளம் 35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்தார்.

தெறி, கத்தி, சர்க்கார், மெர்சல் இது போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீசில் அதிக வசூலை பெற்றுத் தந்தது இந்தப் படங்களுக்குப் பிறகுதான் விஜய் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தற்போது அவர் நடித்து முடித்த பிகில் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 50 கோடி.

அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களில் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார் முதலிடத்தில் ரஜினிகாந்த் உள்ளார் அவர் ஒரு படத்துக்கு 60 கோடி வாங்குகிறார்.