தல அஜித்துடன் இணைவது எப்போது என முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது தல 60 திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்காக யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முருகதாஸ் பேட்டி ஒன்றில் பேசிய தகவல் வைரலாகி வருகிறது.

தீனா படத்திற்கு பிறகு அஜித்துடன் இணையும் வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளி போனது.

என்னுடைய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு அஜித் மகிழ்ச்சியடைந்துள்ளார். எங்களது கூட்டணி எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என கூறியுள்ளார்.