அஜித் 2019ம் ஆண்டின் வசூல் நாயகன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களும் மாஸ் ஹிட்.

விமர்சனம், வசூல் என இரண்டிலும் படத்திற்கு எந்த குறையும் இல்லை. அடுத்து வினோத்திடனேயே இணைந்து தன்னுடைய 60வது படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

படத்திற்காக லுக், உடலமைப்பு எல்லாவற்றையும் மாற்றி வருகிறார். இந்த நிலையில் தல 60வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் எப்போது என பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

ஆனால் கசியப்படும் தகவல் என்னவென்றால் பட பூஜை நாளை (அக்டோபர் 18) நடக்க இருப்பதாக கூறுகின்றனர்.