தெய்வமகள் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் வானி போஜன். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இந்த சீரியல் மூலம் வந்தது.

இந்நிலையில் வானி போஜன் தற்போது விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இதுக்குறித்து நம் தளத்தில் கூட கூறியிருந்தோம். தற்போது இவர் முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அஷோக் செல்வன், ரித்திகா சிங் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வானி போஜன் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே சீரியலில் இருந்து வெள்ளித்திரை வந்து ப்ரியா பவானி ஷங்கர் செம்ம ஹிட் அடித்தார், அவரை போலவே இவரும் ஜொலிப்பாரா பார்ப்போம்.