பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலின் நாயகன் தான் இன்று பல பெண்களின் கனவு நாயகன் என்று கூறலாம்.

அந்த அளவு ஆதி என்ற கார்த்திகேயன் செம்பருத்தி சீரியலின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

கார்த்திகேயன் கனா காணும் காலங்கள் நாடகம் மூலம் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்தார். கனா காணும் காலங்கள் நாடகம் முடிந்தவுடன் அவர் இரண்டு நாடகங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது யாசினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணம் வெகுகாலத்துக்கு நிலைக்கவில்லை, கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்களாம்.

இந்த மனக்கஷ்டத்தில் இருந்து கார்த்திக் வெளிவரவே பல காலம் ஆனது, பல சோதனைகளையும் தோல்விகளையும் கடந்து தற்போது சாதனையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார்.

இன்று என்னதான் சோதனைஇன்று என்னதான் சோதனைகளை கடந்து சென்றாலும் அவரின் காதல் தோல்வி வாழ்க்கையில் மறக்க முடியாத வலியாக தான் உள்ளது.