தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவருக்கு என்றும் பல ரசிகர்கள் உள்ளனர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான ரஜினிமுருகன் என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து அவருக்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் முக்கிய வேடத்தில் வெளியான நடிகையர் திலகம் என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே தினத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பல விருதுகள் கிடைத்தது. இந்த சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் கலந்துகொண்ட அப்போது பேசிய அவர் தன் நடிக்க வந்த புதிதில் தனக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றும் அதன்பின்பு ரஜினி முருகன் திரைப்படத்தில் உன் மேல ஒரு கண்ணு என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானதாகும் கூறினார்.

அதே சமயத்தில் அந்த படத்திற்குப் பிறகுதான் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் தான் கோடி கோடியாய் சம்பாதிக்க முக்கிய காரணம் ரஜினி முருகன் மற்றும் நடிகையர் திலகம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். தற்போதைய நடிகை கீர்த்தி சுரேஷ் போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.