பிகில் படத்துக்கு தடை கோரி தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தெறி மற்றும் மெர்சல் படங்களை அடுத்து இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். முக்கியமாக பெண்கள் கால்பந்து விளையாட்டை மைய கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

ஆஸ்கர் நாயகன் A.R.ரஹ்மான் இசையில் “பிகில்” பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி தற்போது கே.பி.செல்வா என்பவர் ஏற்கெனவே இது சம்மந்தமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

படம் வெளியிடுவதற்கு முன்னதாக சரியான வெடி சத்தத்தை அவரது ரசிகர்கள் உருவாக்கி வருகிறார்கள், மேலும் அதை ஒரு பெரியதாக மாற்ற ரசிகர்கள் எந்தக் கல்லையும் விட்டுவிடவில்லை.

இப்போது தகவல்களின்படி, தளபதி விஜய் நடித்தவர் சென்சார் வாரியத்திடமிருந்து U/A சான்றிதழைப் பெறுகிறார், மேலும் படமானது 2 மணி நேரம் மற்றும் 53 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. அட்லீ இயக்கிய, பிகில் முறையே தந்தை மற்றும் மகன் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரட்டை வேடங்களில் விஜயைப் பார்ப்பார்.

அப்போது இந்த விவகாரம் படத்தின் காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தெரிவிக்கப்பட்டதால் கே.பி.செல்வா, தற்போது வேறு வழியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த அனைத்து ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விவரங்களை பிகில் பட குழு நாளை வழங்குமாறு சொல்லி கேஸ்சை நாளை ஒத்திவைத்தது.