டெல்லி : ரிலையன்ஸ் ஜியோவின் புதிய கட்டண முறை அறிவிப்புக்கு பின்னர் வாடிக்கையாளர் மத்தியில் இது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை எப்படியாவது கூல்படுத்துவதற்காக தற்போது ஜியோவில் ரீசார்ஜ் செய்யும் ஒவ்வரு வாடிக்கையாளர்களுக்கும் முதன்முறை எனில் 30 நிமிடம் முற்றிலும் இலவச டாக்டைம் தரப்படும் எனவும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது வடிக்கயாளர்கள் கவலையை மறக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டதோ அன்றேயே நாளிலிருந்து முதல் 7 நாட்களுக்கு மட்டும் இந்த 1 முறை சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு திடீர் என ஒரு அதிரடி ஷாக் கொடுக்கும் விதமாக இனி ஜியோவை தவிர மற்ற எந்த ஒரு நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வரு அழைப்புகளுக்கும் கட்டணம் வசூலிக்கப் போவதாக அந்த நிறுவனம் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை அறிவித்தது.

இந்த திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்களிடையே தற்போது பெரும் அதிருப்தியும் கவலையும் இருக்கம்.

இந்த நிலையில், ஜியோ எண்ணில் இருந்து ஏர்டெல், ஐடியா போன்ற மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் 2019 அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு எப்போதும் போல பழைய ஜியோ திட்டமே செயல்படும் அதாவது தொடர்ந்து அவர்களுக்கு மட்டும் 3 மாதங்களுக்கு(Recharge Pack பொறுத்து) இலவசமாக வழங்கப்படுகிறது.

வாய்ஸ் கால் கட்டணத்தை டிராய் உத்தரவின் பேரில் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணத்திற்காக வேறு வழியின்றியே ஐ.யு.சி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஜியோ தனது தரப்பு வாதத்தை தெரிவித்தது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து அழைப்புகளுக்கும் இலவசம் என்னும் பழைய அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிலையில், இது அதன் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியாவது வாடிக்கையாளர்களின் மத்தியில் ஏற்பட்ட இந்த அதிருப்தியால், மக்களை எப்படியாவது சமாதானம் செய்ய ஜியோ சார்பில் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மேலும் 10 ரூபாய் கட்டணத்திற்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் என்றும், அதிரடி உத்தரவும் இட்டது. மேலும் ஜியோவின் புதிய அறிவிப்பின் படி அக்டோபர் 9 மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்கள் தொடர்ந்து வாய்ஸ் கால்களை இலவசமாக மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. .

ஜியோவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் வாடிக்கயாளார்கள் குறையலாம் என்ற கருத்தால், ஜியோ நிறுவனம் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் ஜியோவின் இந்த அதிரடியான அறிவிப்பால் இந்த இலவச கால்கள் திட்டம் இருக்கும் வரை வாடிக்கையாளர்கள் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம் இதனால் ஜியோவுக்கு பிரச்சனை என்றாலும், மறுபுறம் இதன் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொண்டாட்டத்தில் உள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.எஸ்.என்.எல் வங்காள வட்டத்தில் சி.ஜி.எம் ராமகாந்த் சர்மா ஜியோவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் 3 -4 % லாபம் பி.எஸ்.என்.எல்லுக்கு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜியோ தனது இலவச சேவைக்கான கட்டணத்தை இப்படி உயர்த்தினாலும், மற்ற நிறுவனங்கள் அதை தற்போது உயர்த்தவில்லை. குறிப்பாக ஐடியா,வோடபோன்,ஏர்டெல் தனது இலவச அழைப்புகளில் எந்த மாற்றமும் இதவுரி இல்லை என உறுதியளித்துள்ளதையடுத்து,

மற்ற நிறுவனங்களும் இலவச சேவைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் நமக்கு சரியே இலவச சேவை கொடுக்காவிட்டாலும், மக்களுக்கு உரிய சேவையை சரியான நேரத்தில் வழங்கினால் சரிதான்.