பிக்பாஸ் 3வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.

அதில் பேசிய இயக்குனர் சேரன் பிக்பாஸில் அப்பா ஸ்தானத்தில் இருந்தது பற்றி பேசினார்.

“அப்பா என்கிற தருணம் ரொம்ப அழகானது. எனக்கு அடிக்கடி ஆண்டவன் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கான். பிக்பாஸ் போன போது அப்பாவாக வாழவேண்டும் என வாய்ப்பு ஏற்பட்டது. அதையும் உண்மையோடு நேர்மையோடு என் மகளை பார்ப்பது போல் நான் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கு, போலி, கேம்காக விளையாடவில்லை. அந்த பாசத்தை பொய்யாக காட்டினால் நான் இந்த உலகத்தில் வாழவே அருகதை இல்லாதவன். அதை நான் உண்மையாகத்தா காமிக்க முடிந்தது” என கூறியுள்ளார் அவர்.