ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியல் மூல சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை வானிபோஜன்.

இதைத்தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து குடும்ப பெண்கள் மத்தில் பெருமளவில் பிரபலமடைந்தார்.

இவ்வாறு சின்னத்திரையில் கலக்கிய வாணிக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது, பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரியலில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.