ஒடிசாவில் இறந்ததாக நினைத்த நபர்இறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்தஅதிசய சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் கபகல்லா கிராமத்தைசேர்ந்தவர் சிமானச் மாலிக், நேற்று முன்தினம் மாலை அருகில் இருக்கும் காட்டுக்குஆடு, மாடுகளை மேய்க்க சென்றுள்ளார்.

மாலை நேரமானதும் கால்நடைகள் வீடுதிரும்பிய நிலையில் மாலிக் வரவில்லை.

தேடிப்பார்த்ததில் காட்டுக்குள்பேச்சு மூச்சில்லாமல் மாலிக் கிடந்துள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாலிக்கை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்ததுடன் இறந்ததாகநினைத்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

உடலை தகனம் செய்யும் இடத்திற்கு அவரை தூக்கிச் சென்ற போது, திடீரென தலையை அசை்சத்துள்ளார்.

இதை பார்த்ததும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துசென்றதும், மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்க உயிர் பிழைத்துள்ளார், தன் கணவர்உயிருடன் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் மாலிக்கின் மனைவி.