தமிழில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் பிகில் டிரைலர் கடந்த சனிக்கிழமை வெளியானது. தளபதியின் 2 லுக், சில காட்சிகள் என டிரைலர் வைரலாகி வருகிறது.

இப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியது போல் டிரைலர் வெளியாகி பல சாதனைகள் செய்து வருகிறது. ஆனாலும் விஜய்யின் பிகில் டிரைலர் முதல் இடத்தை பிடிக்கவில்லை.

யூடியூபில் அதிகம் லைக்ஸ் பெற்ற டிரைலர்களில் ஷாருக்கானின் ஜீரோ பட டிரைலர் முதல் இடத்தில் உள்ளது. இந்திய சினிமா டிரைலர் சாதனைகளில் விஜய்யின் பிகில் டிரைலர் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிகில் பற்றிய புதிய தகவல் என்னவென்றால் இன்று அல்லது இந்த வாரத்தில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்கின்றனர்.