அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

இந்த வருடம் அஜித்-சிவா கூட்டணியில் வந்த விஸ்வாசம் படம் படு ஹிட். அப்படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் நடித்து முடித்துவிட்டு இப்போது தன்னுடைய 60வது பட வேலைகளில் இருக்கிறார்.

சிவாவும் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினியுடன் இணைந்துள்ளார், அந்த அறிவிப்பு அண்மையில் வந்தது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவாவிடம் அடுத்த தலயுடன் எப்போது இணைவீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், ஒரு படம் முடித்துவிட்டு அடுத்த இருக்கும் என அவர் கூறியுள்ளார்.