ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அடுத்த வருடப் பொங்கல் பக்கத்தில் அல்லது பொங்கல் விருந்தாக இப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தற்போது எங்க விட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் மாஸ் ஹிட்டை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் 2.0 படம் எடுக்க முடியாத குறையை போக்கவே இப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக தற்போது வெளியாகியுள்ளது. இது ரஜினியின் 168-வது படம் மேலும் சன் பிக்சர்ஸ் என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

கார்த்திகை வைத்து சிறுத்தை என்ற மாஸ் ஹிட் கொடுத்த பின், தொடர்ச்சியாக தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம் மற்றும் விவேகம் பின்னர் விஸ்வாசம் வரை தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்த இயக்குனர் அதில் விவேகம் வசூலில் சற்று சறுக்கினாலும் நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா அது மாஸ் ஹிட் அடிக்க . அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், திடீர் என்று அதற்குப் பதிலாகத் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா.

சூப்பர் ஸ்டார் 168 படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.