இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் ஆகிய இரு தலைவர்களின் முறைசாரா சந்திப்பிற்கு தமிழகத்தின் மாமல்லபுரம் தெரிவானதன் பின்னணி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் உடனான முறைசாரா சந்திப்பிற்கு இடம் தெரிவு செய்வதில் இந்திய தலைவர்கள் முனைப்பு காட்டிவந்த நிலையில் தமிழகத்தின் வரலற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தை தெரிவு செய்தது சீன அதிகாரிகளே என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தென் இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி காலம் முடிவுக்கு வந்து பல்லவர்கள் கோலோச்சியதன் பின்னர் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சி காலமே பல்லவர்களின் பொற்காலம் என கூறப்படுகிறது.

வணிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட முதலாம் நரசிம்மவர்மன் அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணி வந்துள்ளார்.

இவரது காலகட்டத்தில் சீனத்து வணிகர்கள் தென் இந்தியாவுக்கு வந்ததாகவும், இங்கிருந்து சீனாவுக்கும் வணிகர்கள் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது திபெத் ஒரு சக்திவாய்ந்த தேசமாக உருவாகாமல் தடுக்க சீனாவுக்கு பேருதவியாக அமைந்தது.

மட்டுமின்றி சீனாவில் பெரிதும் போற்றப்படும் முக்கிய புத்த பிக்குகளில் ஒருவரான போதிதர்மன், பல்லவ அரசர்களில் ஒருவரது மூன்றாவது மகன் எனவும், இவர் தமிழகத்தின் காஞ்சீபுரத்தில் இருந்து மாமல்லபுரம் வழியாக சீனாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மாமல்லபுரத்தில் இருந்து சீனா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வணிகத் தொடர்பு இருந்துள்ளது.

மேலும் சீனா, பெர்சியா மற்றும் ரோம் ஆகிய நாடுகளில் உள்ள நாணயங்கள் மாமல்லபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர்பே தற்போது சீன அதிகாரிகளை இந்திய பிரதமருடனான சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தெரிவு செய்ய வைத்துள்ளது.

மட்டுமின்றி முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலேயே மாமல்லபுரம் வந்து சென்றதாக சீனப் பயணி ஹுயென் சாங் தமது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.