நடிகரும் இயக்கருமான சேரன் நல்ல படங்கள் கொடுத்து மக்கள் மனதில் ஏற்கனவே இடம் பிடித்தவர். மேலும் அவர் சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளராக சென்று கூடுதல் ரசிகர்களை சம்பாதித்து விட்டார் . சேரன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்ததால் அப்போது வெளிவந்த படங்கள் பார்க்க முடியவில்லை.

அதனால் தற்போது அவர் திரைக்கு வந்த படங்கள் பார்ப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.அந்த வைகையில் நம்ம வீட்டு பிள்ளை படம் பார்த்து பாராட்டியுள்ளார் .

அதனை தொடர்ந்து பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் பார்த்த சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் அவர்கள் திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றது.இன்னும் முதல் படம் போலவே தன்னை புதுப்பித்து கொள்ளும் கலைஞன் அவருடன் என் முதல் பயணம் தொடங்கியதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்றும் மேலும் அவருக்கு மருந்துகளாக சிறந்த இயக்குனர் நடிகருக்கான தேசிய விருது மற்றும் ஒரு காந்தி படம் போட்ட கரன்சி 1000 முட்டைகள்(2000 ரூபாய் நோட்டாக) வழங்கவேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.