தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர் நடிகை தமன்னா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை படைத்த பாகுபலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்பு நடிகை தமன்னா தமிழ் ஹீரோயினாக நடித்து சமீபத்தில் வெளியான தேவி 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் பெட்டர் மாஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைர மோதிரம் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த மோதிரத்தின் விலை 2 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது இது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அவர் அணிந்திருப்பது வைர மோதிரம் என்பதால் அவ்வளவு விலை என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.