சோனியா பற்றிய அறிமுகம் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தெலுங்கு, கன்னடத்தில் படம் நடித்து விட்டு தான் தமிழில் இவர் அறிமுகம் ஆனது. காதல் கொண்டேன், கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே 2 என அடுக்கிக்கொண்டே போகலாம். இயக்குனர் செல்வராகவனுடன் திருமணம், விவாகரத்து என தடம் புரண்டது வாழ்க்கை. எனினும் பின்னர் தடைகளை தகர்த்து மீண்டும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ட்விட்டரில் தல அஜித் ரசிகர் ஒருவர், “எங்க அஜித்தை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும், அவரை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள்” என கேட்டார்

அதற்கு “நம்மிடம் உள்ளவர்களில் சிறந்த மற்றும் அழகானவர் அஜித், அவர் தன் கண்களின் மூலமாகவே உணர்ச்சியை வெளிப்படுத்துவதை நான் மிகவும் ரசிப்பேன்.” என சொல்லியுள்ளார்.