நடிகர் விஜய்க்கும் அரசியல் வாதிகளுக்கு ஏழாம் பொருத்தம் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் அமைதியாக இருந்தால் இவர் அமைதியாக இருப்பதில்லை.. இவர் அமைதியாக இருந்தால் அவர்கள் அமைதியாக இருப்பதில்லை. இப்படியே பிரச்சனை ஓடிக்கொண்டிருகின்றது.

சமீபத்தில் தான் சர்கார் படத்தில் தமிழக அரசு கொடுத்த விலையில்லா பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளை வைத்து அரசை நேரடியாக இழிவு படுத்தினார் விஜய். இதனை பார்த்த சில பதறுகள் மடிக்கணிணி, ஃபேன், மிக்சி ஆகியவற்றை தூக்கி போட்டு டிக் டாக் வீடியோ வெளியிட்டு கொண்டிருந்தனர்.

இதனால், அதிருப்தியான ஆளும் கட்சியின் தொண்டர்கள் சர்கார் போஸ்டர் பேனர்களை அடிச்சு துவம்சம் செய்தனர். பிரச்சனை முடிந்தது. இப்போது, பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஆனால், படத்தை சென்சார் லிஸ்டிற்கே கொண்டு வரவில்லை தணிக்கை குழு.

இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் படத்தை சென்சார் லிஸ்டில் கூட இன்னும் கொண்டு வராமல் இருப்பது படக்குழுவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தான் இந்த வாரம் வெளியாகவிருந்த ட்ரெய்லர் கூட வெளியாகவில்லை.

இதனால், நடிகர் விஜய் ரஜினியின் உதவியை கேட்க கை விரித்து விட்டாராம் ரஜினி. வேறு வழியே இல்லாமல் அமைச்சர்களின் வீட்டு கதவை தட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம் நடிகர் விஜய். ஆனால், அமைச்சர்களோ இந்த முறை சும்மா விடக்கூடாது என கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

காரணம், இசை வெளியீட்டு விழாவில் யார் யாரை எங்கு உட்கார வைக்கனுமோ..? அவர்களை அங்கு உட்கார வைக்க வேண்டும் என்று ஏக வசனம் பேசியது தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

பொதுவாக, தீபாவளி என்றால் அதற்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் விடுமுறையாகவே இருக்கும். ஆனால், இந்த முறை அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டது அரசு. ஆக, எடப்பாடியார் மனசு வச்சால் மட்டுமே தீபாவளிக்கு பிகில் அடிக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், தலைவா படம் எப்படி தமிழ்நாட்டை தவிர்த்து உலகம் முழுதும் வெளியானதோ அப்படி ஏதாவது பிரச்னையில் பிகில் சிக்கி விடுமோ என்ற பீதியில் உள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.

படத்தின் நெட் பட்ஜெட் மட்டும் 180 கோடி. வட்டி, அது, இது என நிச்சயம் 210 கோடி பட்ஜெட் வந்து விடும். இந்நிலையில், போட்ட காசை எடுத்தால் போதும் என்ற நிலையில் தயாரிப்பு நிறுவனம் இருப்பது வாஸ்தவம் தான்