நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்க கூடியவர். கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் அல்லது சிறு வேடம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். இதன் காரணமாகவே அவர் விஜய் நடிக்கும் தளபதி 64 என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டுள்ளார். பிஸியான நடிகரான விஜய் சேதுப்பதிக்காக அவரது லுக் மாறாமல் காட்சிகளை முன்பாகவே முடித்து விட்டார்களாம். விஜய்யும் அவரது காட்சிகளை முதலில் முடிக்க ஓகே கூறியுள்ளாராம்.

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி பூஜையுடன் இனிதே தொடங்கியது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு, முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஒப்புதல் அளித்து விட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் ஒரு பிஸியான நடிகர். அதனால் அவரின் மற்ற படங்களின் கால்ஷீட்டிற்கு எந்த ஒரு இடையூறும் தொந்தரவும் ஏற்படாமல் இருப்பதற்காக ஒரு முடிவு எடுத்துள்ளார் இயக்குனர்.

விஜய் சேதுபதி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்க கூடியவர். அது வில்லனாக இருக்கட்டும் அல்லது குணச்சித்திர வேடம், கதாநாயகன், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் யதார்த்தமாக பொருந்தக்கூடியவர். அதுவும் பேட்ட படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடிக்க, எந்த ஒரு ஈகோவோ அல்லது பந்தாவோ காட்டாமல் மிகவும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.

அசுரனில் டான்ஸ் கத்துக்கொடுத்த தனுஷ்… கென் கருணாஸ் ஸ்பெஷல் பேட்டி

மேலும் அவர் நடித்து வரும் மற்ற படங்களில் அவர் வேறு கெட்டப்பில் நடிப்பதால் அதற்கு எந்த ஒரு இடைஞ்சலாகவும் இப்படம் இருக்க கூடாது என்பதற்காக அவர் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் முதலில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் விஜய் இடம் பெரும் காட்சிகள் தீபாவளிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து விடைபெறுவார் என்றும் திட்டமிட்டுள்ளனர் பட குழுவினர்.

இப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் கல்லூரி மாணவனாகவும், நடிகர் விஜய் முதன்முறையாக கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளனர். இது கல்லூரியை சார்ந்த கதை என்பதால் இப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

விஜய் சேதுபதி கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கி வருகிறார். தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹிந்தியில் அமீர் கான் நடிக்கும் ஹாலிவுட் ரீமேக் படமான லால் சிங் சத்தா என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.