இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 60வது படத்தில் தனது ரசிகர்களுக்கு அஜித் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுக்க போகிறார் என்கிறார்கள்.
சென்னை: இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 60வது படத்தில் தனது ரசிகர்களுக்கு அஜித் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுக்க போகிறார் என்கிறார்கள்.

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. பிங்க் படத்தின் ரிமோக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.

அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது இதை தல 60 என்று மட்டும் அழைத்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. போலீஸ் கெட்டப் என்பதால் அவர் உடலை குறைத்து வருகிறார். இதில் அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இவர் இந்த படத்தில் கருப்பு நிற முடியில் மீண்டும் தோன்றுவார். தாடி இல்லாமல் , கிளீன் ஷேவ் செய்து இவர் தோற்றம் அளிப்பார். படம் முழுக்க இவர் ஒரே தோற்றத்தில் இருப்பார். சமீபமாக அஜித் நடித்த படங்களில் எல்லாம் அவர் இரண்டு கெட்டப்களை (மேக் அப்) படத்தில் வைத்து இருந்தார்.

அதேபோல் அஜித் நீண்ட நாட்களுக்கு பின் சிறிய முறுக்கு மீசை வைத்து நடிக்க போகிறார். தீரன் படத்தில் கார்த்தி வைத்து இருந்தது போல இந்த மீசை இருக்கும். இதற்காகத்தான் தற்போது அஜித் மீசையை டிரிம் செய்துள்ளார். போக போக அவர் முறுக்கு மீசை வைப்பார் என்கிறார்கள்.

அதேபோல் படத்தில் அவர் பெரும்பாலும் போலீஸ் உடை அணிய மாட்டார். காக்கி பேண்டும், வெள்ளை நிற டீசர்ட்டும் அணிவார் . தொடக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் காக்கி உடை அணிந்து வருவார் என்று கூறுகிறார்கள்.