பிக்பாஸ் வெற்றியாளர் முகேனை விட இலங்கையை சேர்ந்த தர்ஷனே மக்கள் மனங்களை அதிகம் வென்றிருக்கிறார் போலும்.

அவருக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இவரும், மாஸ்டர் சாண்டியும் சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்தனர், சாண்டியை பார்த்த சிம்பு அவரை தூக்கி சுற்றினார்.

பின்னர் இருவருக்கும் புத்தகங்களை பரிசாக அளித்தார், அதில் சிம்பு தர்ஷனுக்கு ஹீரோ என்ற புத்தகத்தை பரிசளித்தார்.